இறால் வளர்ப்பு விவசாயிகள் மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்ய அழைப்பு

நாகை, அக்.31: இறால் வளர்க்கும் விவசாயிகள் தங்களது பண்ணைகளை நாகப்பட்டினம் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்து உறுப்பினராக சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்.பி.நாயர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகை மாவட்டத்தில் இறால் வளர்ப்பு மேற்கொள்ளும் அனைத்து விவசாயிகளும் கடலோர நீர்வாழ் உயிரின ஆணையத்தில் பதிவு செய்வதுடன் நாகப்பட்டினம் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையிலும் ரூ.ஆயிரத்திற்கான வங்கி வரைவோலை NDFFDA என்ற பெயரில் எடுத்து உறுப்பினராக சேர்ந்திட வேண்டும். இறால் வளர்க்கும் அனைத்து விவசாயிகளும் தங்களது இறால் பண்ணைகளை நாகப்பட்டினம் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினராக சேர்ந்திட கூடுதல் விபரங்களுக்கு மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகம், நாகப்பட்டினம் வடக்கு, (இருப்பு) சீர்காழி, எண்.41/ஏ,தென்பாதி மெயின் ரோடு, பெஸ்ட் பள்ளி வளாகம், சீர்காழி - 609110; முகவரியில் இயங்கும் அலுவலகத்தை (அலுவலக தொலைபேசி எண்: 04364 - 271455) நேரில் அணுகி தேவையான விவரங்களை பெற்று பயனடையுமாறு கலெக்டர் பிரவின் பி.நாயர் தெரிவித்துள்ளார்.

Related Stories: