விசைத்தறி தொழிலாளர்களுக்கு 13.50 % போனஸ் உடன்பாடு

அவிநாசி,அக்.25: அவிநாசி வட்டார விசைத்தறி தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு 13.50 சதவீதம் போனஸ் வழங்குவது என இரு தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. அவிநாசி ஒன்றிய பகுதி கூலிக்கு நெசவு செய்யும் உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள், விசைத்தறி தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நேற்று அவிநாசியில் நடைபெற்றது.  இதில் தீபாவளி போனசாக 13.50 சதவீதம் வழங்குவது என ஒப்பந்தம் செய்யப்பட்டது. பேச்சுவார்த்தையின் போது உற்பத்தியாளர் சங்கப் பொறுப்பாளர்கள் முத்துசாமி, செந்தில், நடராஜ், தொழிற்சங்க பொறுப்பாளர்கள் சிஐடியூ. மாநிலத் தலைவர் முத்துசாமி, பழனிசாமி, ஏடிபி சுப்பிரமணி, எல்பிஎப் மோகன்குமார், ஏஐடியூசி செல்வராஜ் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: