சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கம் மகாசபை கூட்டம்

 

திருப்பூர், ஜூன் 24: திருப்பூர் மாவட்ட சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்க 47வது மகா சபை கூட்டம் பூங்கா சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு மற்றும் சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும், சாலையோரங்களில் ஓய்வு பந்தல் மற்றும் பொதுகழிப்பிட வசதி செய்து தர வேண்டும். நலவாரிய பண பயன்களை அதிகப்படுத்த வேண்டும்.

நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முறையை எளிமைப்படுத்த வேண்டும். கூட்செட், எப்சி குடோன், மார்க்கெட், டாஸ்மாக் குடோன்களில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். வீடு இல்லாத சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அரசே வீடு கட்டி தர வேண்டும். 55 கிலோவுக்கு மேல் மூட்டை எடை அனுமதிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இதில், சிஐடியு மாநில செயலாளர் ரங்கராஜ், சிஐடியு விசைத்தறி சங்க மாநில தலைவர் முத்துச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினர்.

தொடர்ந்து மாவட்ட செயலாளர் உன்னிகிருஷ்ணன், சங்க பொருளாளர் ஜெயராம், சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் பாலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாநகர செயலாளர் ஜெயபால், தங்கவேல், நடராஜ், கிஷோர்குமார் உள்ளிட்டார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில், ரயில்வே கூட்செட், டாஸ்மாக் குடோன், தினசரி மார்க்கெட், லாரி ஆபீஸ், எப்சி குடோன், கூட்டுறவு பண்டகசாலை, அரிசி கடை வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதில் திருப்பூர் மாவட்ட சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்க தலைவராக ராஜகோபால், செயலாளராக பாலன், பொருளாளராக ஜெயபால் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

The post சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கம் மகாசபை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: