பெருந்தொழுவில் மக்களை தேடி மருத்துவ சிறப்பு முகாம்

 

பல்லடம், ஜூன் 28: பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் வட்டார பொது சுகாதாரத்துறை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சமூக மருத்துவ துறை மற்றும் பெருந்தொழுவு ஊராட்சி ஆகியவை சார்பில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் டெங்கு காய்ச்சல், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்த நோய் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு போன்றவைகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சுந்தரவேல், திருப்பூர் மருத்துவக் கல்லூரி சமூக நலத்துறை உதவி பேராசிரியர்கள் மருத்துவர்கள் கெளவுசிக், ஏவல் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வரதராஜ், சுகாதார ஆய்வாளர் வினோத், காசநோய் மேற்பார்வையாளர் ராஜ்குமார் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர். பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான ரத்தசோகை தடுப்பு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளி சிறார் நலத்திட்ட மருத்துவர்கள் சியாமளா கெளரி, நவீன்ராஜ் மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.

The post பெருந்தொழுவில் மக்களை தேடி மருத்துவ சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: