பெரிய வாளவாடியில் ஜமாபந்தி அதிகாரிகள் வராததால் மக்கள் ஏமாற்றம்

உடுமலை, ஜூன் 26: உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஜஸ்வந்த்கண்ணா தலைமையில் ஜமாபந்த் நடந்து வருகிறது. நேற்று பெரிய வாளவாடி உள்வட்டத்துக்குட்பட்ட வலையபாளையம், எரிசினம்பட்டி, கொடிங்கியம், தின்னப்பட்டி, சர்க்கார்புதூர், ரெட்டிபாளையம், ஜிலோபநாயக்கன்பாளையம், அரசூர், கிருஷ்ணா புரம், சின்னபாப்பனூத்து, பெரியபாப்பனூத்து, உடுக்கம்பாளையம, புங்கமுத்தூர், செல்லப்பம் பாளையம், தேவனூர்புதூர், இராவணாபுரம், பெரியவாளவாடி, சின்னவாளவாடி, தீபாலபட்டி, மொடக்குப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது.

இதில், மனு அளிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். ஆனால் பெரும்பாலான துறை அதிகாரிகள் வரவில்லை. இதனால், அனைவரிடமும் கோட்டாட்சியரே மனுக்களை பெற்று பதில் அளித்துக்கொண்டிருந்தார். ஆண்டுக்கொருமுறை நடக்கும் ஜமாபந்தியில் கூட, மக்கள் பிரச்சினைகளை தீர்க்க துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

The post பெரிய வாளவாடியில் ஜமாபந்தி அதிகாரிகள் வராததால் மக்கள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: