நாடாளுமன்ற தேர்தல் பணியின் போது இறந்த அரசு ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் கருணை தொகை

 

திருப்பூர், ஜூன்25: திருப்பூர் நாடாளுமன்றத் தேர்தல் பணியின்போது இறந்த அரசு ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் கருணைத் தொகையை கலெக்டர் கிறிஸ்துராஜ் குடும்பத்தாரிடம் வழங்கினர். நாடாளுமன்ற பொதுதேர்தல்-2024 ன் போது திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் (வடக்கு) சட்டமன்ற தொகுதியில், வாக்குச் சாவடி அலுவலர் நிலை-4 ஆக நியமனம் செய்யப்பட்ட திருப்பூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையில், மடத்துக்குளம் வட்டத்தில் சாலைப் பணியாளராக பணியாற்றி வந்த ராஜா என்பவர் தேர்தல் பணியின் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தேர்தல் பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் கருணை தொகையான ரூ.15 லட்சம் வழங்க முன்மொழிவுகள் அனுப்பப்பட்டு, அரசாணை பெறப்பட்டது. இந்நிலையில் தேர்தல் பணியின் போது உயிரிழந்த அரசு ஊழியர் ராஜாவின் வாரிசுதாரர்களுக்கு, கருணை தொகையான ரூ.15 லட்சம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.இந்நிகழ்ச்சியின் போது மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு, மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post நாடாளுமன்ற தேர்தல் பணியின் போது இறந்த அரசு ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் கருணை தொகை appeared first on Dinakaran.

Related Stories: