சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், அக்.24: பெரம்பலூர் அருகே திருமாந்துறையில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க நிலம் கொடுத்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் அருகே குன்னம் தாலுகா, திருமாந்துறையில் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக கையகப்படுத்திய 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலத்தில் உடனே தொழி ற்சாலை தொடங்க வலியுறுத்தி, பெரம்பலூர் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு நிலம் அளித்த விவசாயிகள் நல சங்கத்தினர் நேற்று ஆப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமாந்துறை ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். செயலர் முத்தமிழ்ச்செல்வன், பொருளாளர் முருகன், அமைப்பு செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக விவசாயிகளிடமிருந்து 12 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்திய நிலத்தில் உடனடியாக தொழிற்சாலைகள் தொடங்கி, நிலம் வழங்கிய விவசாயிகளின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். ஒப்பந்தத்தில் கூறியதுபோல் நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு மேம்படுத்தப்பட்ட வீட்டுமனை வழங்க வேண்டும். இல்லையெனில், கையகப்படுத்திய நிலத்தை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Related Stories: