நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 410 காசாக நிர்ணயம்

நாமக்கல், அக். 23: வடமாநிலங்களில் முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 3 காசுகள் உயர்த்தப்பட்டு, 410 காசாக நிர்ணயம் செய்துள்ளனர். நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நேற்று மீண்டும்  3 காசுகள் உயர்த்தி என்இசிசி விலை நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி ஒரு முட்டையின் பண்ணை பரிந்துரை விலை 407 காசில் இருந்து, 410 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குளிர்காலம்  தொடங்கியுள்ளதால் வடமாநிலங்களில் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் முட்டை விலை நாடு முழுவதும் உயர்ந்து வருவதாக என்இசிசி நாமக்கல் மண்டல சேர்மன் டாக்டர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: