ஆடவர் கைப்பந்து போட்டியில் முத்தாயம்மாள் கல்லூரி மாணவர்கள் சாதனை

நாமகிரிப்பேட்டை, அக்.18: சேலம் பெரியார் பல்கலைக்கழக அளவிலான ஆடவர் கைப்பந்து போட்டிகள், ராசிபுரம் வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ராசிபுரம் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல் இடத்தை பிடித்தது. போட்டியில் நாமக்கல், சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 11 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில், சேலம் ஏவிஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும், ராசிபுரம் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும் மோதின. இதில் 22க்கு 26 என்ற கோல் கணக்கில் ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரி அணி வெற்றி பெற்றது. இதுவரை 9 முறை பல்கலைக்கழக ஆடவர் கைப்பந்து போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இப்போட்டியின் வாயிலாக,  6 மாணவர்கள் அகில இந்திய அளவிலான கைப்பந்து போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றனர்

சிறப்பாக விளையாடிய மற்றும் கோப்பையை வென்ற மாணவர்களுக்கு, கல்லூரி  செயலாளர் முத்துவேல் ராமசுவாமி, பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் வெங்கடாசலம் மற்றும் பெரியார் பல்கலைக்கழக ஆடவர் அணிகளின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், முதல்வர் செல்வகுமரன், புல முதன்மையர் ஸ்டெல்லாபேபி ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். மேலும், கல்லூரியின் தாளாளர் ராமசுவாமி, விஜயகுமார், பெரியசாமி, உடற்கல்வி இயக்குநர்கள் ரமேஷ், தவமணி மற்றும் லோகலட்சுமி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்

Related Stories: