இன்று சிறப்பு திட்ட முகாம்

மதுரை, அக். 18:மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் இன்று சிறப்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் கள்ளிக்குடி தாலுகாவில் நேசநேரியிலும், மேலூர் தாலுகாவில் வலையன்குளத்திலும், உசிலம்பட்டி தாலுகாவில் குறவகுடியிலும், மதுரை கிழக்கு தாலுகாவில் பனைக்குளத்திலும், மதுரை வடக்கு தாலுகாவில் மாரணவாரியேந்தலிலும் நடக்கிறது.இதேபோல், பேரையூர் தாலுகாவில் சின்னக்கட்டளையிலும், மதுரை மேற்கு தாலுகாவில் கோச்சடையிலும், மதுரை தெற்கு தாலுகாவில் அவனியாபுரத்திலும், திருப்பரங்குன்றம் தாலுகாவில் மாடக்குளத்திலும், திருமங்கலம் தாலுகாவில் உச்சப்பட்டியிலும் நடைபெற உள்ளது.  முகாமிற்கு தாசில்தார்கள் தலைமை வகித்து பொதுமக்கள், விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற உள்ளனர். வருவாய்துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Related Stories:

>