மதுரை மாவட்டத்தில் 29 இடங்கள் வெள்ளம் பாதிப்பு பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது

மதுரை, அக். 18:மதுரை மாவட்டத்தில் 29 இடங்கள் வெள்ளம் பாதிப்பு பகுதி என கண்டறியப்பட்டுள்ளது.   வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், மதுரை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் வினய் தலைமை வகித்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், அனைத்து ஆர்டிஓக்கள், தாலுகா தாசில்தார்கள், பொதுபணித்துறை, விவசாயத்துறையினர், தீயணைப்பு, போலீஸ் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் கலெக்டர் வினய் கூறும்போது, ‘‘வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 29 இடங்கள் வெள்ள பாதிப்பு இடமாக கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில், வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அங்குள்ள மக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைப்பதற்காண முகாம் உள்ளிட்ட  அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள நீர்வரத்து கால்வாய்களில் உள்ள அடைப்புகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய அனைத்து மாநகராட்சி, நகராட்சி, மற்றும் ஊராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

Advertising
Advertising

Related Stories: