ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் உலக விபத்து விழிப்புணர்வு தின உறுதிமொழி

நாகர்கோவில், அக். 18:

நாடுமுழுவதும் அக்டோபர் 17ம் தேதி உலக விபத்து விழிப்புணர்வு தினம் நடத்தப்படுகிறது. இதனையொட்டி ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விபத்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மருத்துவக்கல்லூரி டீன் பாலாஜிநாதன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அருள்பிரகாஷ், உறைவிடமருத்துவர் டாக்டர் ஆறுமுகவேலன், அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜோனிமென்டிஸ், டாக்டர் விஜயஆனந்த் மற்றும் மருத்துவக்கல்லூரி அவசரசிகிச்சை பிரிவு மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டீன் பாலாஜிநாதன் கூறியதாவது: இந்தியாவில் சாலை விபத்தில் தினமும் 400க்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். விபத்து நடந்த உடன் ஒரு மணிநேரத்தில் மருத்துவமனையில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை கோல்டன் அவர்ஸ் என கூறப்படுகிறது. 1 மணிநேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு வந்தவுடன் அவர்களுக்கு தேவையான சிகிச்சையை உடனே கொடுக்க வேண்டும். அப்படி என்றால் விபத்தில் சிக்குபவர்களில் பெரும்பாலானோரை காப்பாற்ற முடியும். குமரி மருத்துவக்கல்லூரியில் விபத்து அவசர சிகிச்சைப்பிரிவு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. விபத்தில் சிக்குபவர்களை ஒரு மணிநேரத்திற்குள் கொண்டு வரும் போது, உரிய சிகிச்சை அளித்து, அவர்களின் உயிர்களை காப்பாற்ற முடியும் என்றார்.

Related Stories: