லாரி மோதியதில் டூவிலரில் சென்றவர் பலி

திருப்பரங்குன்றம், அக். 17: திருப்பரங்குன்றம் அருகே லாரி மோதியதில் டூவீலரில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார். திருப்பரங்குன்றம் அருகே உள்ள திருநகர் துர்கா நகரைச் சேர்ந்தவர் மகாதேவன் (40).  தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக  பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை திருநகரில் இருந்து திருமங்கலம் நோக்கி தனது டூவீலரில் ஹெல்மெட் அணிந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையிலிருந்து திருமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி திருநகரை அடுத்த சீதாலட்சுமி நகர் பகுதியில் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி டூவீலரில் சென்ற மகாதேவன் மீது மோதியது. இதில் மகாதேவன் மீது லாரியின் சக்கரம் ஏறியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.சம்பவ இடத்திற்கு வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் மகாதேவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: