தூய்மை இந்தியா விருது பெற்றவருக்கு பாராட்டு

மதுரை, அக். 17:மதுரையை அடுத்த ஒத்தக்கடை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் முன்னாள் மாணவி செல்விக்கு, பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்திற்காக ‘ஸ்வச் பாரத் புரஸ்கார் விருது’ கிடைத்துள்ளது. இதனையொட்டி, அவருக்கு பாராட்டு விழா தலைமை ஆசிரியை (பொறுப்பு) மாலா தலைமையில் நடந்தது. ஆசிரியர் மோசஸ் மங்களராஜ் முன்னிலை வகித்தார். தூய்மை இந்தியா விருது பெற்ற செல்விக்கு ஆசிரியைகள் மல்லிகா, மெர்சி, ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்து பாராட்டினர். செல்வி தன்னுடைய ஏற்புரையில், “தூய்மை பணிக்காக எனக்கு கிடைத்த அங்கன்வாடி பணியை மறுத்தேன். ஏறத்தாழ 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்ட கிராமப்புற மக்களிடம், குறிப்பாக பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்” என்றார்.  

ஏற்பாடுகளை ஆசிரியைகள் ஜெயந்தி, பானு, வாசுகி ஆகியோர் செய்திருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: