கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இந்திய விமான படையில் ஏர்மேன் பணிக்கு தேர்வு

நாகை, அக்.16: இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கான தேர்வு நாளை (17ம் தேதி) முதல் 21ம் தேதி வரை கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது என்று கலெக்டர் பிரவீன் பி நாயர் தெரிவித்துள்ளார்.இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கான (குரூப் எக்ஸ் பணி, கல்வி பயிற்றுநர்) தேர்வு முகாம் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் உடற் கல்வித்துறை உள் அரங்கில் நாளை (17ம் தேதி) முதல் வரும் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. நாளை தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. பட்டபடிப்பு முடித்தவர்கள் 1995ம் ஆண்டு ஜீலை மாதம் 19ம் தேதி முதல் 2000ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். முதுநிலை பட்டம் பெற்றோர் 1992ம் ஆண்டு ஜூலை மாதம் 19ம் தேதி முதல் 2000ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். திருமணமானவராக இருந்தல் 22 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். அரசால் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஆங்கிலத்தை பாடமாக கொண்டு ஏதாவது ஒரு பட்ட படிப்புடன் 50 சதவீத தேர்ச்சி பெற்று பிஎட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வில் கலந்து கொள்வோர் அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும். அசல் சான்றிதழ் கல்லூரியில் இருந்தால் அது குறித்து கல்லூரி முதல்வரின் சான்றிதழுடன் கூடிய கையொப்பம் இட்ட நகல் சான்றிதழை எடுத்து வரவேண்டும். கூடுதல் தகவல் அறிய www.airmenselection.cdac.in என்ற இணைய தள முகவரியை பார்க்கலாம். அல்லது நாகை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம். அல்லது தொலைபேசி எண் 04365 253042 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: