தோகைமலை தளிஞ்சி ஊராட்சியில் 100 நாள் வேலை தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம்

தோகைமலை, அக். 16: தோகைமலை அருகே தளிஞ்சியில் சிறப்பு தணிக்கை கிராம சபை கூட்டம் நடந்தது.கரூர் மாவட்டம் தோகைமலை அருகே தளிஞ்சி ஊராட்சியில் 100 நாள் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பணிகள் மற்றும் பணியாளர்கள் செய்த பணிகள் குறித்து சமூக தணிக்கை இறுதிசெய்தல் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. புரசம்பட்டியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே மரத்தடியில் நடந்த இக்கூட்டத்திற்கு மூத்தகுடிமகன் பாஸ்கரன் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா முன்னிலை வகித்தார்.

இதில் 2018-19 ம் ஆண்டிற்கான முதல் அரையாண்டில் வடசேரி ஊராட்சியில் 100 நாள் பணியாளர்களின் பணிவிபரங்கள், மொத்த செலவீனங்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தின் விபரங்கள் என சமூக தணிக்கையாளர்களை கொண்டு கடந்த வாரம் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு அறிக்கைகளை கிராம சபையில் ஒப்புதல் பெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் புதிய பணிகளாக மரக்கன்றுகள் நடுதல், குளங்கள், மற்றும் வாரிகளை தூர்வாருதல், சாலைஓரம் பராமரிப்பு உட்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் நீர் மேலாண்மை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் வட்டார வள அலுவலர் திலீப்குமார், ஊராட்சி மன்ற செயலாளர் கலியராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: