பட்டறையில் நிறுத்திய லாரியில் 6 டயர் திருட்டு

சேலம், அக். 10: சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் முகமது கவுஸ். இவர், லாரி பாடி பில்டிங் பட்டறை வைத்துள்ளார். இங்கு புது லாரி ஒன்று பாடி பில்டிங்கிற்காக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆயுதப்பூஜையையொட்டி பட்டறைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. பின்னர் நேற்று முன்தினம் பட்டறைக்கு சென்றபோது புது லாரியில் இருந்த 6 டயர்கள் திருடப்பட்டிருந்தது தெரிந்தது. இதுகுறித்து முகமது கவுஸ் சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: