பவானி அருகே மாரப்பம்பாளையம் ஏரியில் மரக்கன்று, பனை விதைகள் நடவு

பவானி, அக்.10: ஜல்சக்தி அபியான் திட்டத்தில் பவானி அருகே எலவமலை கிராமம், மாரப்பம்பாளையத்தில் உள்ள சுமார் 2.5 ஏக்கர் ஏரி தூர்வாரப்பட்டு 250 மரக்கன்று, 300 பனை விதைகள் நடும் விழா நேற்று நடந்தது.

தமாகா ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் மற்றும் பயனீர் கிரீன் சர்க்கிள் செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர், துணை ஆணையாளர் ஆண்டாள், வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகவடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமாகா மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர் மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர். அதிமுக கிளை செயலாளர் செந்தில், மாவட்டப் பொதுச் செயலாளர்கள் ஸ்ரீதர், ரபீக், எஸ்சி. எஸ்டி., பிரிவு நிர்வாகி கண்ணம்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: