கரூர் உழவர் சந்தையில் இஞ்சி விலை குறைவு எலுமிச்சை விலை அதிகம்

கரூர், அக்.10: கரூர் உழவர்சந்தைக்கு விவசாயிகள் தக்காளி விற்பனைக்காக கொண்டுவருவர். தற்போது விளைச்சல் இல்லை, ஹைபிரிட் தக்காளி தர்மபுரி ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட்டில் இருந்தும், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்தும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

ஒருகிலோ தக்காளி கடந்த மாதம் ரூ.10க்கு விற்பனையானது. நேற்று ரூ.20ஆகஇருந்தது. கடந்த சில மாதங்களாக இஞ்சி விலை தொடர்ந்து உயர்ந்தது. கிலோ ரூ.300வரை விற்பனையான நிலையல் படிப்படியாக விலை குறைந்துவந்தது.

நேற்று உழவர்சந்தையில் கிலோ இஞ்சி ரூ.70ஆகஇருந்தது. எலுமிச்சை விலைஇந்த சீசனில் விலை குறைவாகஇருக்கும். ஆனால் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. புயல் காரணமாக நாகை மாவட்டம் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் எலுமிச்சை மரங்கள் சரிந்தன.

இதன் வேர்கள் மற்ற மரங்களைப்போல பலமாக இருப்பதிலலை. இதனால் மரங்கள் அழிந்ததால் எலுமிச்சை விலை தொடர்ந்து அதிகமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆயுத பூஜையையொட்டி ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து எலுமிச்சை வரத்து அதிகமாக இருந்தது. எனினும் உழவர் சந்தையிலேயே எலுமிச்சை கிலோ ரூ,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடைகளில் ரூ.150முதல் ரூ.200 வரை விற்பனை செய்கின்றனர். எலுமிச்சை விலை உயர்வு காரணமாக உணவகங்களில் எலுமிச்சை சாதம் கட் ஆகிவிட்டது.

Related Stories: