அளவுக்கு அதிகமாக மது குடித்த தறிப்பட்டறை தொழிலாளி, டெய்லர் சாவு

ஈரோடு, அக்.10:ஈரோட்டில் அளவுக்கு அதிகமாக மது குடித்த தறிப்பட்டறை தொழிலாளி பலியானார்.  ஈரோடு அருகே பெரியசேமூர் பெரியதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (47). தறிப்பட்டறை தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர், நேற்று முன்தினம் பெரியசேமூர் முதலிதோட்டம், சுடுகாடு அருகிலுள்ள டாஸ்மாக் கடைக்கு கிருஷ்ணகுமார் மது அருந்த சென்றார்.அங்கு அளவுக்கு அதிகமாக மது வாங்கி குடித்த நிலையில் கிருஷ்ணகுமார் அங்கேயே மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

டெய்லர் பலி: திருப்பூர்  மாவட்டம் வீரபாண்டி அருகே பழவஞ்சிபாளையம் மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர்  கொடியரசு (36). இவர், திருப்பூரில் ஒரு தனியார் பனியன் கம்பெனியில்  டெய்லராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பிரியா (26). இவர்களுக்கு  திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தைகள் இல்லை.கடந்த 7ம் தேதி கொடியரசு, தனது உறவினர்களுடன் கொடிவேரி அணைக்கு சென்றார்.   அப்போது அளவுக்கு அதிகமாக மது அருந்தினார். இதனால் நடக்க முடியாத அளவிற்கு  போதையில் இருந்ததால் அவரை காரில் படுக்க வைத்துவிட்டு, அனைவரும் அணையில்  குளிக்க சென்று விட்டனர். குளித்துவிட்டு காரில் வந்து பார்த்தபோது  கொடியரசு மயக்க நிலையிலேயே காணப்பட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த  உறவினர்கள் உடனடியாக கொடியரசுவை சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கொடியரசு இறந்து  விட்டதாக கூறினர்.

Related Stories: