மன்னார்குடி அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு மனிததிறன் மேம்பாடு பயிலரங்கம்

மன்னார்குடி, அக்.10: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசு கலைக் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறையின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இளம் மேலாண் வல்லுநர்களுக்கான மனிதத் திறன்கள் மேம்பாடு குறித்த ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ) ரவி தலைமை வகித்தார். கருத்தரங்கில் சென்னை லயோலா கல்லூரி சமூகவியல்துறை உதவி பேராசிரியர் அருள் காமராஜ் கலந்து கொண்டு வணிக நிர்வாகவியல் துறையில் பயிலும் மாணவர்கள் எவ்வாறு தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொண்டு வருங்கால சந்ததியினருக்கு வேண்டிய நிர்வாகத் திறன்களை முன் கணித்து, முக்கிய முடிவுகளை மேற்கொள்வதற்கான செயல்முறை விளக்கங்களை அளித்தார்.

இதில் வணிக நிர்வாகவியல் மற்றும் பல்வேறு துறைகளையும் சார்ந்த பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர்கள் சுமதி, பிரபாகரன், பாலமுருகன், ஞானலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். பயிலரங்க அவை கூட்டுநர் சுமதி வரவேற்றார். உதவி பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் பிரபாகரன் நன்றி கூறினார்.

Related Stories: