டிஜெஎஸ் கல்வி குழுமம் விஜயதசமி விழாவில் மாணவர்களுக்கு புத்தக பை

கும்மிடிப்பூண்டி, அக். 9: கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டி.ஜெ.எஸ் பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளி சார்பில் நேற்று விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. டி.ஜெ.எஸ் கல்வி குழும வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். நிகழ்வில் டி.ஜெ.எஸ். மெட்ரிக் பள்ளி தாளாளர் டாக்டர் பழனி, டி.ஜெ.எஸ் பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளி தாளாளர் ஜி.தமிழரசன், நிர்வாக அலுவலர் ஏழுமலை, டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஞானபிரகாசம், துணை முதல்வர் சீனிவாசன், டி.ஜெ.எஸ் பப்ளிக் பள்ளி சிபிஎஸ்பி பள்ளி முதல்வர் சுகாதா தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில், விஜயதசமி குறித்த மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து விழாவில் பல்வேறு வகுப்புகளில் மாணவர் சேர்க்கை துவங்கியது. இதில் மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் மடியில் அமர்ந்து அவர்களது விரல்களை பிடித்து புரோகிதர் வேத மந்திரம் முழங்க அரிசியில் \\”அ\\” என்கிற எழுத்தை எழுதி தங்கள் கல்வியை துவங்கினர். தொடர்ந்து மாணவர்களுக்கு டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் புத்தக பை, பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்தினார். இரு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை வாழ்த்தினர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை டி.ஜெ.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டி.ஜெ.எஸ் பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளி ஆசிரியர்கள் முன்னின்று சிறப்பாக நடத்தினர்.

Related Stories: