பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளியில் உலக ரேபீஸ் நோய்தடுப்பு, இதய தினம்

கருங்கல், அக். 2: கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளியில் வெறிநாய்க்கடி மற்றும் உலக இதய தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.  பள்ளித் தலைவர் டாக்டர் தங்கசுவாமி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் முன்னிலை வகித்தனர். கிள்ளியூர் வட்டார சுகாதார மருத்துவர் டாக்டர் அபிலா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் முருகன், வினீத் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து ‘ரேபிஸ்’ என்னும் வெறிநாய்கடி நோய் பரவும் விதம், அறிகுறிகள், தீர்க்கும் முறை போன்றவை குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். மாணவர்களில் சிறப்புப் பாடல், குறுநாடகம், சிறப்புரை போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. வெறிநாய்க்கடி மற்றும் உலக இதய தினம் குறித்து ஆசிரியர்களின் விளக்க உரையுடன் கூடிய காணொலிக் காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து ஆசிரியர்கள், மாணவர்கள்  செய்திருந்தனர்.

Related Stories: