தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தல் தொடங்கியது: மே 20 கடைசி நாள்

 

நாகர்கோவில், ஏப்.21: குமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை செய்திகுறிப்பு: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2024-2025 ஆம் கல்வியாண்டில் அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் (எல்கேஜி, 1ம் வகுப்பு) குறைந்தபட்சம் 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குதல் சார்பாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்ட மாநில முதன்மைத் தொடர்பு அலுவலரால் சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் விதமாக வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் வகையில் சேர்க்கை நடைமுறை குறித்து ந.க.எண் 1872/சி1/2024, நாள் 01.04.2024-இன்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் வழிகாட்டுதலின்படி தொடக்கநிலை வகுப்பிற்கு (எல்.கே.ஜி. அல்லது முதல் வகுப்பிற்கு) 1 கி.மீ. அருகாமையில் பள்ளி அமைந்திருக்க வேண்டும். சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் 22.04.2024 முதல் 20.05.2024 வரை எங்கிருந்தும் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம், கன்னியாகுமரி மாவட்டக்கல்வி அலுவலகம் (தனியார் பள்ளிகள்)/ நாகர்கோவில், மார்த்தாண்டம் மாவட்டக்கல்வி அலுவலகம் (இடைநிலை), மாவட்டக்கல்வி அலுவலகம் (தொடக்கக்கல்வி), வட்டாரக்கல்வி அலுவலகம்/ ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டாரவளமையம் ஆகிய அலுவலகங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் விண்ணப்பிக்க தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட தனியார் பள்ளிகள் மூலமாகவும் இணைய வழிமூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தல் தொடங்கியது: மே 20 கடைசி நாள் appeared first on Dinakaran.

Related Stories: