நீடாமங்கலம் அருகே 23 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

நீடாமங்கலம், அக்.1: நீடாமங்கலம் ஒன்றியம் எடகீழையூர் பம்பாளியார் தெரு சாலை 23 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் சேறும் சகதியுமாக உள்ள சாலையால் வாகனஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர். .இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம்எடகீழையூர் ஊராட்சி பம்பாளியார் தெருவிலிருந்து காரக்கோட்டை செல்லும் சாலை உள்ளது.இங்கு சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கிருந்து எடகீழையூர்,மன்னார்குடி,தஞ்சாவூர்,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று மாணவ, மாணவிகள் பள்ளி,கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்தசாலை மழைகாலத்தில் சேரும் சகதியுமாக ஆகிவிடுகிறது.இரு சக்கர வாகனங்களில் சென்று வருவது மிகவும் கடினமாக உள்ளது.இரவு நேரங்களில் சாலையில் வரும் போது கீழே விழுந்து காயங்களுடனும்,அணிந்திருக்கும் ஆடைகள் சேறாகவும் செல்லவேண்டிய அவல நிலை உள்ளது.மழை நேரங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரால் நோய் பரவும் அபாய நிலை உள்ளது.இந்த சாலை கடந்த 93 ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் போடப்பட்டது.அதன்பிறகு பலமுறை நீடாமங்கலம் ஊராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. 23 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையை அப்பகுதி மக்கள் நலன்கருதி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: