மர்மநபர்களுக்கு வலைவீச்சு பர்மா பஜார் வியாபாரிகள் மனு சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் கும்பகோணம் நகரம்

கும்பகோணம், அக். 1: சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்துவதால் கும்பகோணம் நகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இதுகுறித்து தெரிந்தும் காவல்துறை கண்டுகொள்ளாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.கும்பகோணம் நகரில் கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், மகாமக குளம், புதிய பேருந்து நிலையம் உள்ள நான்கு வீதிகளிலும் ஆயிகுளம், ஹாஜியார் தெரு, லெட்சுமி விலாஸ் அக்ரஹாரம், உச்சி பிள்ளையார் கோயில், காந்தி பூங்கா, சாரங்கபாணி சுவாமி கோயில் உள்ளிட்ட பகுதிகளில் பிரதான வர்த்தக பகுதியாகும். தினம்தோறும் இப்பகுதிகளில் உள்ள வணிக பகுதிகளுக்கு 100க்கும் மேற்பட்ட லாரிகள், கனரக வாகனங்களில் பொருட்களை இறக்கி, ஏற்றி செல்வர்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக கும்பகோணம் பகுதியில் உள்ள அனைத்து சாலையோரத்தில் வாகனங்களை இறக்கி விட்டு பொருட்களை இறக்கி வைப்பர். இதனால் இந்த சாலைகளில் அடிக்கடி வாகன போக்குவரத்து ஏற்பட்டு வருகிறது.

இதேபோல் கும்பகோணம் லட்சுமி விலாஸ் அக்ரஹாரம் சாலை அனைத்து அரசு அலுவலகங்களுக்கு சென்று வரும் பிரதான சாலையாகும். மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரும் சாலையாக இருப்பதால் வார நாட்களில் பகல் நேரங்களில் அதிகமான வாகன போக்குவரத்து இருக்கும்.

ஆனால் சாலைகளின் இருபுறங்களிலும் வாகனத்தை நிறுத்தி வைத்து விடுவதால் தினம்தோறும் பகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து திருப்பத்திலும் சிசிடிவி கேமராவை பொருத்தி காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து போக்குவரத்து நெரிசலை கண்காணித்து எச்சரிக்கை விடுத்தும், வாகன போக்குவரத்தை மைக் மூலம் சீர் செய்தும் வந்தனர். ஆனால் நாளடைவில் சிசிடிவி கேமரா மற்றும் மைக்குகளை பராமரிக்காமல் பழுதானதால் தற்போது காட்சி பொருளாக சில இடங்களில் தொங்கி கொண்டிருக்கிறது.எனவே தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி உடனடியாக கும்பகோணம் நகர பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: