சிக்கண்ணா கல்லூரியில் என்.எஸ்.எஸ்., தின விழா

திருப்பூர், செப். 25: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் என்.எஸ்.எஸ்.தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாணவ செயலர் சந்தோஷ், செஞ்சிலுவை சங்க செயலர் பேரரசு ஆகியோர் தலைமையில் கல்லூரி வளாகத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் மாணவ, மாணவியர் ஈடுபட்டனர். தொடர்ந்து கல்லூரி முதல்வர் தீபா மாணவர்களுக்கு தூய்மை இந்தியா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி, இது போன்ற தூய்மை பணிகளில் மாணவர்கள் தொடர்ந்து ஈடுபடுவதால் தவறான பாதையில் செல்வதை தவிர்க்கலாம், மனமும் தூய்மை அடையும் என்றார். பிறகு இளைஞர் செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து அல்சைமர் நோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு ரிப்பன் அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் புஷ்பலதா, விநாயகமூர்த்தி, பாண்டியா உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான அலகு-2 ஒருங்கிணைப்பாளரும் இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலருமான மோகன்குமார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Related Stories: