சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்காததால் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க கோரி 30ம்தேதி நில மீட்பு போராட்டம் விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

பெரம்பலூர்,செப்,24: பெரம் பலூர் மாவட்டத்தில் சிறப் புப் பொருளாதார மண்ட லம் அமைக்கப் படாததால், நிலத்தை மீண்டும் விவசா யிகளிடமே ஒப்படைக்க வலியுறுத்தி வருகிற 30ம் தேதி நிலமீட்புப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் கலெக்டரிடம் மனு அளித்துள்ளது.பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்றுகாலை பொதுமக் கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடைபெற் றது.அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் செல் லதுரை தலைமையில், மாவட்டத் தலைவர் இராஜேந்திரன், அகில இந் திய விவசாயத் தொழிலா ளர்சங்க மாவட்டச் செயலா ளர் ரமேஷ், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசி உள்ளிட்டோருடன் வந்து அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதா வது :பெரம்பலூர் மாவட்டம், குன் னம் தாலுகா, பெரம்ப லூர் நேரு சர்க்கரை ஆலை அருகே, தேசிய நெடுஞ்சா லையை ஒட்டி, சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக கடந்த 2007ம் ஆண்டில் 3000 ஏக்கர் நிலத்தை விவசாயி களிடம் சொற்பவிலைக்கு, ஆந்திராவைச் சேர்ந்த ஜிவிகே நிறுவனமும், இந் திய அரசின் பெருவணிகத் துறையும் இணைந்து, நில ங்களை கையகப்படுத்தி னர்.

 நிலங்களைக் இழப்ப தால் வாழ்வாதாரம் பாதிக் கப்படும் எனக் கூறிய விவ சாயிகளிடம், வீட்டுக்கு ஒரு வருக்கு வேலையும், வீட்டு மனையும் கொடுப்பதாக ஒப்பந்தப் பத்திரம் பதிவு செய்தும் கொடுத்தனர்.பின்னர் சிறப்புப் பொருளா தார மண்டலம் அமைக்கப் படாமல் தள்ளிப் போனதா ல் 2013-ம் ஆண்டு முன்னா ல் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதிகளி ன்படி சிறப்புப்;பொருளா தார மன்றத்திற்காக கைய கப்படுத்தப்பட்ட நிலங்களி ல், தமிழக அரசு சார்பாக ரூ 827கோடி மதிப்பீட்டில் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற் சாலைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித் தார். ஆனால் 13 ஆண்டு களாகியும் இது வரை சிற ப்புப் பொருளாதார மண்ட லமும் அமைக்கப்படவில் லை. எனவே நில த்தை விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்க வேண் டும் என்ற விதிகளின்படி, நிலங்களை விவசாயிக ளிமே உடனே ஒப்படைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தலை மையில் அனைத்துக் கட்சி கள், தொழிற்சங்கங்கள், விவசாய சங்க கூட்டமைப்பு கள் மற்றும் நிலம் கொடு த்த விவசாயிகள் இணை ந்து வருகிற 30ம் தேதிய ன்று நில மீட்புப் போராட்டம் நடத்தி, நிலத்தைமீட்டு விவ சாயிகளுக்கு வழங்க உள் ளோம் என அந்த கோரிக் கை மனுவில் தெரிவித்து ள்ளார்.

Related Stories: