மண்டைக்காடு அருகே கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சிறுவர்கள் குடும்பத்திற்கு தலா 1 லட்சம்

நாகர்கோவில், செப்.24: மண்டைக்காடு அருகே கடல் அலையில் சிக்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி தலைமையில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், நேற்று நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 463 கோரிக்கை மனுக்கள் நேற்று பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

 மேலும் மண்டைக்காடு அருகே லெட்சுமிபுரம் வருவாய் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் 16.06.2019 அன்று கடல் அலையில் சிக்கி உயிரிந்த நிலையில் முதலமைச்சர் பொதுநிவாரண நிதியின் கீழ், ரெகின் என்பவரது தாயார் குயின்மேரி, இன்பென்டர் ரகீட் தாயார் மேரி கிரிஜா, சச்சின் தாயார் மேரி கீதா ஆகியோரிடம் தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி வழங்கினார். தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபுல் காசிம் மற்றும் அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: