நாளைய மின்தடை நீடாமங்கலம் அருகே நகர் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு முன்னோடி விவசாயி செயல் விளக்கம்

நீடாமங்கலம்,செப்.20: தஞ்சை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்தில்தங்கி நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதியில் 3 மாதகாலம் வேளாண்மை பற்றியும்,வேளாண்மை தொழில் நுட்பங்கள் பற்றியும் நீடாமங்கலத்தில் உள்ள ஒவ்வொரு அலுவலகம் சார்பில் கிராம பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் தெரிந்து கொண்டு வருகின்றனர்.மேலும் கிராமப்புறத்தில் உள்ள முன்னோடி விவசாயிகளை கண்டறிந்து அவர்களிடம் வேளாண்மையின் வேளாண் தொழில் நுட்பங்களை தெரிந்து கொண்டும் வேளாண்மை சார்ந்த ஆடுவளர்ப்பு,மீன் வளப்பு கோழிவளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில் நுட்பங்களை தெரிந்து பல்வேறு பயிற்சிகளையும் கள அனுபவங்களையும் பெற்று வருகின்றனர்.இந்நிலையில் நேற்று நீடாமங்கலம் அருகில் உள்ள நகர் கிராமத்திற்கு சென்று அங்குள்ள முன்னோடி விவசாயிகளை சந்தித்து வேளாண்மை பற்றி குறிப்பெடுத்து தெரிந்து கொண்டனர்.

Related Stories: