100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்த கோரி குஜிலியம்பாறை யூனியன் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

குஜிலியம்பாறை, செப். 19: நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த கோரி குஜிலியம்பாறை யூனியன் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் தங்கவேல் தலைமை வகிக்க, ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் அருள்செல்வன், மாவட்ட பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள 17 கிராம ஊராட்சகளில் செயல்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 100 நாட்கள் வேலை செய்யும் விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும், சம்பளம் ரூ.400 உயர்த்தி வழங்கிட வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் வழங்கப்படும் சம்பளம் ரூ.227ஐ முழுமையாக வழங்க வேண்டும், குடிநீர் பிரச்னை உள்ள கிராமங்களில் குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்கள் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில்தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கவேல், தலைவர் ஜெயபால், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம், ஒன்றிய குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி, ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: