ஒற்றை தீர்வு மையத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

ஈரோடு, செப். 19:   ஈரோட்டில் ஒற்றை தீர்வு மையத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரசின் சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட இருக்கும் ஒற்றை தீர்வு மையத்தில் பணியாற்ற தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பம் ஈரோடு மாவட்ட இணையதள முகவரியில் www.erode.nic.in உரிய படிவம் மற்றும் பணியிடம், தகுதி குறித்த விபரங்கள் உள்ளது.  இந்த இணையதள முகவரியில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஒற்றை தீர்வு மையத்தில் வழக்கு தொழிலாளி பணியிடத்திற்கு சமூக பட்டப்படிப்பு, முதுகலை பட்டம் பெற்றவர்களும், ஐடி பணியாளர் பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் கம்ப்யூட்டர் பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்பு, கம்ப்யூட்டர் பொறியாளர் படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

 ஏதேனும் ஒரு அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் பணியாற்றியவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மேலும், பல்நோக்கம் உதவியாளர் பணியிடத்திற்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.  உதவியாளர் பணியில் குறைந்தது 3 ஆண்டு சமையல் தெரிந்தவராகவும், உள்ளூரில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். கல்வி தகுதி தேவையில்லை. இதேபோல், பாதுகாவலர் பணியிடத்திற்கு அரசு அல்லது பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.  இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், 6வது தளம், ஈரோடு-642011 என்ற முகவரிக்கு வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: