குழந்தை இல்லாததால் வாலிபர் தற்கொலை

பேரையூர், செப்.17: பேரையூரில் குழந்தை இல்லாத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பேரையூர் கே.கே.ஜி.நகரை சேர்ந்தவர் முத்தையா மகன் சங்கர்(32). கப்பலூரிலுள்ள தொழிற்சாலையில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சரண்யா. குழந்தை கிடையாது. இதனால் சங்கர் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உடலை கைப்பறி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: