உசிலம்பட்டி பெண்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

உசிலம்பட்டி, செப்.17: உசிலம்பட்டியில் எஜூகேட்டர் தொண்டு நிறுவனம் சார்பில் பெண்களுக்கான இலவச கம்ப்யூட்டர் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது. உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளர் அழகேஸ்வரி(பொ) தலைமை வகித்தார். எஜூகேட்டர் தொண்டுநிறுவனத் தலைவர் வேல்முருகன் வரவேற்றார். உசிலம்பட்டி கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் செல்வம் மற்றும் சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளி தலைமை ஆசிரியர் அமுதப்பிரியா ஆகியோர் துவக்கி வைத்தனர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நிஜாமுதீன், லயன்ஸ் கிருஷ்ணமூர்த்தி, பிரேம்குமார், அகிலாக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எஜூகேட்டர் தொண்டு நிறுவன தலைவர் வேல்முருகன் கூறுகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு பெண்கள் சுயமாக முன்னேற 4 மாதகால இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் உசிலம்பட்டி மற்றும் சுற்றுப்புறங்களில் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு முடித்த உள்ள 30 பெண்களை தேர்ந்தெடுத்து இப்பயிற்சி நடத்தப்படுகிறது. முழுக்க முழுக்க ஏழ்மையில் உள்ள பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரேமாராணி நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: