கன்னியாகுமரியில் பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு பைக் பயணத்திற்கு வரவேற்பு

கன்னியாகுமரி, செப். 17:  கேரள மாநிலம் ட்ரீம் ரைடர்ஸ் கிளப்பை சேர்ந்த இளைஞர்கள் 40 பேர் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை தடுக்க கோரியும், கேரளா முதல் காஷ்மீர் வரை இருச்சக்கர வாகன விழிப்புணர்வு பிரசாரம் செய்கின்றனர். கடந்த 13ம் தேதி கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து முதல்வர் பினராயி விஜயன் இந்த விழிப்புணர்வு பிரசார பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த குழு தற்போது கன்னியாகுமரி வந்ததுள்ளது. அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி, சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் கேத்ரின், இயக்குநர் மைக்கேல்ராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

இந்த விழிப்புணர்வு பிரசார பயணத்தை தமிழகம், கர்நாடகா, தெலங்கானா, ஹரியானா, டில்லி, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை 40 நாளில் பைக்கில் கடந்து காஷ்மீரில் நிறைவு செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

Related Stories: