நடவடிக்கை எடுக்க கோரிக்கை மன்னார்குடியில் லோக்அதாலத் 7 வழக்குகளில் ரூ. 9.61 லட்சத்திற்கு தீர்வு

மன்னார்குடி, செப். 15: மன்னார்குடியில் நடைபெற்ற லோக்அதாலத் நீதிமன்றத்தில் 7 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு தீர்வு தொகையாக ரூ 9. 61 லட்சம் பெறப்பட்டது. மேலும் நீண்ட வருடமாக நிலுவையில் இருந்த இடம் சம்பந்தமான வழக்குக்கு தீர்வு காணப்பட்டது. உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின் பேரில் லோக்அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நேற்று நாடு முழுவதும் நடை பெற்றது. அதன்படி மன்னார்குடி சார்பு நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி பிரேமாவதி தலைமையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கள் ராமகிருஷ்ணன், தமிழரசன், உதயகுமார், இளஞ்சேரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தாலுகா அளவில் 2267வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, குடும்பநல வழக்கு, உரிமையியல் வழக்குகள் என 52 வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 7 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு தீர்வு தொகையாக ரூ 9 லட்சத்து 61 ஆயி ரம் பெறப்பட்டது. மேலும் மன்னார்குடி நடேசன் தெருவை சேர்ந்த ரோசலின் மேரி, ஜான் ஆல்பர்ட் ஆகியோரின் இடம் சம்பந்தமான வழக்கு ஒன்று நீண்ட வருடங் களாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் நேற்று நடைபெற்ற லோக் அதாலத் நீதி மன்றத்தில் மேற்கண்ட வழக்கை சார்பு நீதிபதி பிரேமாவதி சமரச தீர்வு கண்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் வழங்கினார்.

Related Stories: