தீக்குளித்த இளம்பெண் சாவு

சேலம், செப். 11: சேலம் இரும்பாலை மோகன் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரியா (28). இவருக்கும் நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டையை சேர்ந்த செந்தில் என்பவருக்கும் 10ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு,  பிரியா கணவருடன் குடும்ப நிகழ்ச்சிக்காக சேலத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று காலை பிரியா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து இரும்பாலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: