சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

உடுமலை, செப். 11:கொழுமம் புள்ளக்கார ஓடையில், சாலை மிகவும் குறுகலாக, பள்ளங்களுடன் காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். ருத்ராபாளையம் பகுதி மக்கள் பழனி மற்றும் உடுமலைக்கு இந்தவழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இப்பகுதி மடத்துக்குளம் தொகுதியில் வருகிறது. இந்த தொகுதி எம்எல்ஏவாக திமுகவை சேர்ந்த ஜெயராமகிருஷ்ணன் உள்ளார். அவரும் பலமுறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.திமுக எம்எல்ஏ தொகுதி என்பதால், அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். உடனடியாக பள்ளங்களை மூடி, சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: