ரோட்டோர குப்பையால் சிக்கந்தர்சாவடியில் எரியும் தீ புகையால் மூச்சுத்திணறும் மக்கள்

மதுரை, செப்.11: மதுரை சிக்கந்தர் சாவடியில் தினமும் தீ எரிந்து கொண்டே இருக்கிறது. புகையும் ஏழுவதால் மக்கள் மூச்சுத்திணறலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.மதுரை மாநகராட்சி எல்லையில் சிக்கந்தர்சாவடி அமைந்துள்ளது. இங்கு ரோட்டோரம் ஓட்டல்கள், பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். சாலையோரத்தில் கிடக்கும் குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைக்கின்றனர். தினமும் தீயும் புகையுமாக இப்பகுதி காட்சியளிக்கிறது. வாகனத்தில் செல்பவர்கள், தீ, புகைக்கு பயந்து செல்ல வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

புகையால் அப்பகுதியில் நடந்து செல்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே குப்பைகளை கொட்டுவதை தடுத்தாலே தீயும் புகையும் ஏற்பட வாய்ப்பு இல்லை. முன்பு மாநகராட்சியாக இல்லாமலும் வீடுகள் இல்லாமலும் இருந்த பகுதியாகும். தற்போது வளர்ச்சி அடைந்து மாநகராட்சியாகி உள்ளது. ஆனால் பழைய பழக்கம் போகவில்லை. குப்பைகளை கொட்டுவது தொடர்கதையாகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: