தடகள போட்டியில் வெற்றி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

மதுரை, செப்.11: மேலூர் கல்வி மாவட்ட அளவிலான ‘ஆ’ குறுவட்ட தடகள விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இளமனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல் நிலைப்பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு விழா நேற்று நடந்தது. தலைமையாசிரியர் (பொ) பரஞ்சோதி டேவிட் தலைமை வகித்தார். முதுகலை தமிழாசிரியர் சண்முகவேல் முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் மகேந்திரபாபு வரவேற்றார்.17 வயதிற்குட்பட்ட பெண்கள் கபடி போட்டியில் முதலிடமும், 19 வயதிற்குட்பட்ட ஆண்கள் கேரம் போட்டியில் முதலிடமும் மற்றும் தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், உடற்கல்வி ஆசிரியர் முத்துராசாவும் பாராட்டப்பட்டனர்.

Advertising
Advertising

Related Stories: