ஒட்டன்சத்திரம் நகராட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

ஒட்டன்சத்திரம், செப். 11:  ஒட்டன்சத்திரம் நகராட்சியில் வீடு இல்லாத பொதுமக்கள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆணையாளர் தேவிகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி அறிவுறுத்தலின் பேரில், ஒட்டன்சத்திரம் நகராட்சி 18 வார்டுகளிலும் குடியிருக்கும் வீடு கட்ட தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு நகராட்சி பகுதியில் வேறு எங்கும் கான்கிரிட் வீடு இருக்கக்கூடாது. பதிவு செய்யப்பட்ட பத்திரம், பட்டா வைத்திருக்க வேண்டும். மாத வருமானம் ரூ.25 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில் வீடு கட்டுவதற்காக நபர் ஒன்றுக்கு ரூ.2.10 லட்சம் வழங்கப்படும். இது நான்கு நிலைகளில் பயனாளிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். கட்டிட அடித்தளம் முடிந்த பின் ரூ.50 ஆயிரம், கட்டிடத்தின் விண்டல் முடிந்த பின் ரூ.50 ஆயிரம். கட்டிடத்தின் கான்கிரிட் முடிந்த பின் ரூ.50 ஆயிரம், அனைத்து வேலைகளும் முடிந்த பின் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்கில் ரூ.60 ஆயிரம் செலுத்தப்படும். கட்டப்படும் குடியிருப்பின் பரப்பளவு 300 முதல் 500 சதுரடி வரை இருக்க வேண்டும். ஒவ்வொரு குடியிருப்பிலும் தனி வசிப்பறை, படுக்கையறை, சமையலறை, குளியல் அறை அமைக்க வேண்டும். மேலும் தகவலுக்கு நகராட்சி மக்கள் உதவி பொறியாளர் குபேந்திரனை தொடர்பு கொள்ளலாம்’ என்றார்.

Advertising
Advertising

Related Stories: