கோவை, செப்.11: கோவை சின்னவேடம்பட்டி குளம் சுமார் 200 ஏக்கர் நீர்தேக்க பரப்பு கொண்டது. 1 லட்சம் ஏக்கர் பாசன பரப்பிற்கான நீர் ஆதாரமாக உள்ள இந்த குளம், கன மழை பெய்தும் நீர் தேக்கமின்றி காணப்படுகிறது. அவினாசி அத்திக்கடவு திட்டத்தின் இரண்டாவது மேம்பாட்டு திட்டத்தில் இந்த குளம் சேர்க்கப்பட்டுள்ளது. சில மாதம் முன், இந்த குளத்திற்கு வரும் ராஜ வாய்க்காலில் 8 கி.மீ தூரத்திற்கு நாட்டு மரக்கன்றுகளை தன்னார்வ அமைப்பினர் நட்டனர். உயிர் வேலி மூலமாக இந்த குளத்தின் நீர் வாய்க்கால் பாதுகாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குளத்திற்கு நீர் வரவில்லை. குருடிமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் மழை பெய்தால் காட்டாற்று வெள்ளம் மூலமாக சின்னவேடம்பட்டி குளம் நிரம்பி விடும்.
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை 30 நாளுக்கு மேலாக மழை பெய்து நீரோடையில் வெள்ளம் பாய்ந்தும், குளத்திற்கு நீர் வந்து சேரவில்லை.