தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு எதிர்ப்பு 2,500 வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

ஈரோடு, செப். 11: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் 2,500 வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர்.சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானி மேகலாய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடம் மாற்றம் செய்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குழு அரசுக்கு பரிந்துரை செய்தது. இதற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் பவானி, பெருந்துறை, கோபி, சத்தி உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் வக்கீல்கள் கோர்ட்டுக்கு செல்லாமல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதில், மாவட்டத்தில் 2,500க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Advertising
Advertising

Related Stories: