ஈரோடு நேதாஜி சாலையில் புதுப் பொலிவுடன் விரிவுப்படுத்தப்பட்ட ஆர்.டி.விவாஹா ஜூவல்லர்ஸ் துவக்கம்

ஈரோடு,மே11: ஈரோடு நேதாஜி சாலையில் புதிய பொலிவுடன் விரிவுப்படுத்தப்பட்ட நகை கடை ஆர்.டி.விவாஹா ஜூவல்லர்ஸ் துவக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு ஆர்.டி.குழும நிறுவனங்களின் நிறுவனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஆர்.டி. குழும நிறுவன தலைவர் ராகுல் முன்னிலை வகித்தார்.ஆர்.டி.குழும நிறுவனங்களின் செயலாளர் ராதா செந்தில்குமார், முதன்மை நிர்வாக இயக்குநர் கீர்த்தனா ராகுல் ஆகியோர் குத்து விளக்கேற்றினர். நிகழ்ச்சியில், கோவை அல்ட்ரா நிறுவன நிர்வாக இயக்குநர் சிவசாமி, சுமதி சிவசாமி,ராணா தீக்சித் ராகுல் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள்,வாடிக்கையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஆர்.டி.குழும நிறுவனங்களின் நிறுவனர் செந்தில்குமார் கூறியதாவது: எங்களது ஆர்டி ஜூவல்லர்ஸ் கடந்த 28 ஆண்டுகளாக தங்க நகைகள் மொத்த வியாபாரம் செய்து வருகிறோம். ஈரோடு மட்டுமின்றி தமிழ்நாட்டில் 18க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட நகைக்கடைகளுக்கு நாடு முழுவதும் இருந்தும் புதிய டிசைன்களில் 916 தங்க நகைகள் வழங்குகிறோம்.

தற்போது ஆர்டி விவாஹா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் புதிய பொலிவுடன் விரிவுப்படுத்தப்பட்டு 3 தளங்களில் 5 ஆயிரம் சதுர அடியில் திறக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு கடைக்காரர்களுக்கு வழங்கிய அதே விலையில் சில்லறை விற்பனையில் வழங்க உள்ளோம். இங்கு தங்க செயின்களுக்கு 6 முதல் 7 சதவீதம் சேதாரம்,ஆரம், நெக்லஸ் வகைகளுக்கு 9 முதல் 11 சதவீதம், தாலிக் கொடிக்கு 6 முதல் 7 சதவீதம், வளையல்களுக்கு 8 முதல் 11 சதவீதம், ஒட்டியாணத்துக்கு 10 முதல் 12 சதவீதம் என குறைந்த சேதாரத்தில் நகைகள் விற்கப்படுகிறது. எங்களது கடையில் நகைகளுக்கு செய்கூலி கிடையாது. இந்திய பாரம்பரிய நகைகள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டிசைன்கள் என்று அனைத்தும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஈரோடு நேதாஜி சாலையில் புதுப் பொலிவுடன் விரிவுப்படுத்தப்பட்ட ஆர்.டி.விவாஹா ஜூவல்லர்ஸ் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: