பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் விஜய் விகாஸ் மெட்ரிக் பள்ளி சாதனை

பவானி,மே11: பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம், டோல்கேட் அருகில் செயல்பட்டு வரும் விஜய் விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவி வி.எஸ்.கனிமொழி, ஏ.கவீனா ஆகியோர் 500-க்கு 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி டி.தனிகா 492 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி ஏ.எம்.தனுஷியா 491 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.மேலும், கணிதத்தில் 5 பேரும், சமூக அறிவியலில் 4 பேரும், அறிவியல் பாடத்தில் ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதேபோன்று, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவி வி.ஜோவிதா 600-க்கு 588 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், எஸ்.ஓம்பிரணவி 574 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவன் வி.வினித் 559 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனர்.

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்த 12 வருடங்களாக இப்பள்ளி தொடர்ந்து 100 சத தேர்ச்சி பெற்று வருகிறது.சாதனை படைத்த மாணவ,மாணவியருக்கு பள்ளியின் தலைவர் கலைச்செல்வன், தாளாளர் மற்றும் துணைத் தலைவர் பழனிசாமி, பொருளாளர் தவமணி ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். பள்ளியின் கல்விசார் இயக்குனர் பழனிவேல், முதல்வர் சித்ரா, துணை முதல்வர் விஜயலட்சுமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

The post பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் விஜய் விகாஸ் மெட்ரிக் பள்ளி சாதனை appeared first on Dinakaran.

Related Stories: