கொடியரசு கோவில் கும்பாபிஷேகம்

சோழவந்தான், செப்.10: சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் வண்டமுனீஸ்வரர், கொடியரசு கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோவிலில் கல்தூண் பீடங்களுடன் மேடை, சுற்றுப்புற சுவர் உள்ளிட்ட திருப்பணிகள் சில மாதங்களாக நடைபெற்று நேற்று முன்தினம் முதல்கால யாக பூஜைகள் துவங்கியது. நேற்று காலை மஹாகணபதி ஹோமத்துடன் விஷேச பூஜைகள் நடைபெற்று, கடங்கள் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து கல்தூண் பீடத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: