மதுரை கூடலழகர் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.10.91 லட்சம்

மதுரை, மே 3: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.10.91 லட்சம் வசூலானது. மதுரை கூடலழகர் பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான 2 உபகோயில்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கான உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கோயில்களில் உள்ள உண்டியல் காணிக்கை முழுவதும் கோயில் வளாகத்தில் கூடுதல் பொறுப்பு உதவி ஆனையர் யக்ஞ நாராயணன் முன்னிலையில் நேற்று எண்ணப்பட்டது. இதில் ரொக்கமாக ரூ.10 லட்சத்து 91 ஆயிரத்து 59 இருந்தது.

இதேபோல் பொன் இனங்கள் 47 கிராம். வெள்ளி இனங்கள் 73 கிராம் மற்றும் அயல் நாட்டு ரூபாய் நோட்டுக்கள் 3 கிடைக்கப் பெற்றன. மேலும், இத்திருக்கோயிலின் திருப்பணி உண்டியலில் காணிக்கையாக ரூ.81 ஆயிரத்து 43 கிடைக்கப்பெற்றது. இந்த உண்டியல் திறப்பில் பங்கறே்ற பக்தர்கள் பேரவையினர், காணிக்கை எண்ணும் பணிகளில் ஈடுபட்டனர்.

உண்டியல் திறப்பின் போது, திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயில் துணை ஆணையர் சுரேஷ், இந்து சமய அறநிலையத்துறையின் சோழவந்தான் பிரிவு ஆய்வாளர் ஜெயலெட்சுமி ஆகியோர் கண்காணிப்பு அலுவலர்களாகவும், திருக்கோயிலின் தக்கார் பிரதிநிதியாக சுந்தரராஜன், கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

The post மதுரை கூடலழகர் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.10.91 லட்சம் appeared first on Dinakaran.

Related Stories: