சைமா புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவை, செப். 10: தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) 60ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோவை தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. 2019-20ம் ஆண்டின், முதல் நிர்வாக குழு கூட்டத்தில் சைமா தலைவராக கோவை, பிரிகாட் மெரிடியன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அஸ்வின் சந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இவர், இந்திய ஜவுளி கூட்டமைப்புகளின் நிர்வாக குழு உறுப்பினராக உள்ளார்.

Advertising
Advertising

துணை தலைவராக கோவை அத்வைத் டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர் ரவி, திண்டுக்கல் சிவா டெக்ஸ்யார்ன் நிர்வாக இயக்குனர் சுந்தரராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுந்தரராமன், கோவை இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டுள்ளார். தற்போது, இந்திய தொழில்நுட்ப ஜவுளி சங்கத்தின் தலைவராக உள்ளார். இந்த தகவலை, சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வராஜூ தெரிவித்துள்ளார்.

Related Stories: