அலங்காநல்லூரில் இணைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு அலங்காநல்லூர் போக்குவரத்து ஊழியர் கொலையில் 2 பேர் கைது

அலங்காநல்லூர், ஆக.22: அலங்காநல்லூரில் போக்குவரத்து ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள 15பி.மேட்டுபட்டியை சேர்ந்தவர் பெரியணன்(32). இவர் மதுரை பசுமலை அரசு பணிமனையில் ஊழியராக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி இரவு ஊரிலுள்ள நாடகமேடையில் இரத்தக்கறை படிந்திருந்தது. கிராமத்திற்கு அருகே பெரியணன் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டு கிடந்தார். இதையொட்டி அலங்காநல்லூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
Advertising
Advertising

அப்போது அதே ஊரை சேர்ந்த சிலம்பரசன் (38), சிவா(24) மற்றும் பெரியணன் ஆகிய 3 பேரும் அங்குள்ள நாடகமேடையில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் குடிபோதையில்  ஆத்திரமடைந்த இருவரும் பெரியணனை தலையில் கல்லை போட்டு கொலைசெய்துவிட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சிலம்பரசன், சிவாவையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: