வேல்டெக் பல்கலைக்கழகத்தில் மின் வாகனங்கள் தயாரிப்புபுதிய பாடத் திட்டம் துவக்கம்

திருவள்ளூர், ஆக. 20:  ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகமும் மத்திய அரசின் தன்னியக்க தொழில் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து மத்திய அரசின் திறன் மேம்பாட்டு செயலாக்கம் மற்றும் மின் நகர்வு திட்ட குறிக்கோளை அடைய பயிற்சி மற்றும் கல்விக்கான புதிய பாடத் திட்டத்தை துவக்கி உள்ளனர். இதற்காக எம்.டெக். பவர்ட்ரெயின் இன்ஜினியரிங் மற்றும் மின் ஹைபிரிட் வாகனங்கள் எனும் புதிய படாதிட்டத்தினை துவக்க பூனேவில் இயங்கும் ஏஆர்ஏஐ இன்ஸ்டியூட் மற்றும் வேல்டெக் பல்கலைகழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

இந்த ஒப்பந்தத்தின் படி இந்தியாவிலேயே முதல்முறையாக  எம்.டெக். பவர்ட்ரெயின் இன்ஜினியரிங் மற்றும் மின் ஹைபிரிட் வாகனங்கள் என்ற புதிய படாதிட்டம் துவக்க விழா வேல்டெக் பல்கலைக்கழகத்தில்  கல்வி இயக்குனர் கோட்டீஸ்வர ராவ் தலைமையில் நடைபெற்றது. இயந்திரவியல் துறை டீன் ரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். ஆவடி ஏர் கமாண்டர் டி.எஸ். டாகர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். முடிவில் ஆட்டோமொபைல் துறைத்தலைவர் அமலா ஜெஸ்டிஸ் செல்வம் நன்றி கூறினார்.

Related Stories: